Sunday 19th of May 2024 03:26:34 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது!

யாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது!


புகையிரத சேவைகள் மீள ஆரம்பமாகியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம புகையிரத அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் புறப்பட இருக்கின்றது. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கு புறப்பட்டு,யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி புகையிரதமும், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 க்கு புறப்படும் யாழ் தேவி புகையிரத சேவை ஆரம்பமாகி இருக்கின்றது.

அவ்வாறே கல்கிசையில் இருந்து 5.55 க்கும் , 6.35 க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் யாழ் தேவி புகையிரதமும், 11.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி புகையிரதமும் இன்று சேவையைஆரம்பிக்க இருக்கின்றது.

ஏனைய புகையிரத சேவைகள் 25 ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட புகையிரதமும், இரவு தபால் புகையிரதம் உட்பட அனைத்து புகையிரத சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருக்கின்றது.

பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும்.

அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினைமேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.

பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரதத்தில் பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என தெரிவித்துள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE